மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!

மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையில் மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையினர்.

நாடு முழுவதும் கொரோனாஇரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இன்று முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் காளீஸ்வரி என்ற பெண்ணிற்கு அடையாள அட்டை காண்பித்தும் காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் காவல்துறையினரிடம் அப்பெண் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.



Tags

Next Story
ai marketing future