ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எண்ணை காப்பு உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எண்ணை காப்பு உற்சவம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எண்ணை காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணைக் காப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோணா ஊரடங்கு காரணமாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு ஸ்தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஸ்ரீ வடபத்ர சயனர் கோவில் வளாகத்தில் வைத்தே என்னை காப்பு உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும்.
அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாட் றுவது உள்ளிட்ட அனைத்தும் நடைபெற்று பின்பு நீராட்டு நடைபெறும். அதனடிப்படையில் இந்த வருடம் ரகு பட்டர் என்பவர் எண்ணைக்காப்பு உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாளுக்கு உபசாரங்களை செய்தார்.
குறிப்பாக எண்ணெய்க்காப்பு உற்சவத்தின்போது ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்டப்படும் எண்ணெயானது தாழம் பூ, மகிழம் பூ, வெட்டிவேர் உள்ளிட்ட மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு ஸ்ரீஆண்டாள் சாற்றுவது வழக்கம் தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஆறாம் திருநாளன்று கூடாரவல்லி என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் பிரசித்தி பெற்ற மூக்குத்தி சேவை என்றும் அழைப்பர் கொரோணா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் இன்றி பட்டாச்சாரியார்கள் முன்னிலையிலேயே இன்று எண்ணை காப்பு உற்சவம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu