2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
X

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

இராஜபாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தரராஜபுரம் மாசாணி அம்மன் கோவில் தெரு வசிப்பவர் தங்கச்சாமி (வயது 59 ).சத்துணவு அமைப்பாளர். இவர் 2015 ஆம் ஆண்டு ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு பள்ளி சிறுமிகளை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கினை நீதிபதி தனசேகரன் விசாரித்து இன்று தங்கச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தலா10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!