மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு சாகும்வரை ஆயுள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு சாகும்வரை ஆயுள்
X

பாலியல் தொல்லை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிரைவர் வெனீஸ்குமார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை. டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார் வயது 27. இவர் கார் ஓட்டும் டிரைவர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 30. 7 .2018 அன்று இரவு 12 மணிக்கு பத்தாவது படிக்கும் மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று ஆளில்லா வீட்டுக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வினிஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன் டிரைவர் வெனிஸ்குமாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூபாய் பத்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்தார். வெனிஸ் குமாருக்கு 342 பிரிவின் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் 366 பிரிவின்கீழ் பத்து வருஷம் ஆயிரம் ரூபாய் அபராதமும் 5 ( I) 5 (L) சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே வெனீஸ் குமார் தனக்கு விதிக்கப்பட்ட 3,000 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி விட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்