பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்

பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலியல் தாக்குதலில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தனியார் அமைப்பு சார்பில் பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலில் இருந்து காப்பாற்றவும், குழந்தை திருமணம் தடை சட்டம், குழந்தைகள் மற்றும் பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் வாயிலில் இருந்து மாவட்ட நீதிபதி தனசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதற்கு முன்னதாக குழந்தை திருமணம் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி தனசேகரன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதிகள், பார் கவுன்சில் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!