/* */

ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை காரணமாக சுமார் 20 வீடுகள் இடிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை காரணமாக சுமார் 20 வீடுகள் இடிந்து சேதம்
X

ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக இடிந்து விழுந்து சேதமான வீடு.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி , கிருஷ்ணன்கோவில் செண்பகத்தோப்பு வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாடர் கனமழை என்பது பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொட்டைபத்தான் கண்மாய், பொன்னாங்கன்னி கண்மாய், திருவண்ணாமலை குளம், செங்குளம் கண்மாய், வடமலைகுறிச்சி கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை பகுதிகளான செண்பகத்தோப்பு பேயானாற்று ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ரைட்டன்பட்டி, குலாலர் தெரு, ஓட்டமடம், கோட்டைபட்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உடனே அதிகாரிகள் சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு உடனே வீட்டை சீரமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’