7 ஆண்டுகளுக்குபின் சென்னையில் கனமழை: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

7 ஆண்டுகளுக்குபின் சென்னையில்  கனமழை: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
X

பைல் படம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

7 ஆண்டுகளுக்கு பின்பு சென்னையில் நேற்று இரவு மிகப்பெரிய அளவில் கனமழை பெய்துள்ளது

7 ஆண்டுகளுக்கு பின்பு சென்னையில் நேற்று இரவு மிகப்பெரிய அளவில் கனமழை பெய்துள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

2015 க்கு பின்பு நேற்று இரவு சென்னையில் மிகப்பெரிய அளவில் 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.சென்னையில் நீர் தேங்கி கூடிய இடங்களில் மாண்பு முதல்வர் பார்வையிட்டுள்ளார்.தமிழகத்தில் நேற்று 18.24 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் பல பகுதி சேதம் அடைந்துள்ளது.பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளில் 500 கன அடி நீரிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.கரையோர மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் இல்லாத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மழை சம்பந்தமாக தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மழையை எதிர்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு சார்பில் உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!