ஸ்ரீவில்லிபுத்தூர் சேது நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் சேது நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சேது நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேது நாராயண பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு காலை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. வேதநாராயண பெருமாள் கோவில். சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வைணவ ஸ்தளத்தில் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை மூலவர் மற்றும் உற்சவ விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும் ஓதப்பட்டது. பின்னர் பரமபதவாசல் வழியாக சேது நாராயண பெருமாள் வெளியேறி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu