வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்

வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்
X

நெல் மூட்டைகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 7400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் தற்போது அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் பட்டா வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கால தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. 10 நாட்களுக்கு மேலாகியும் கட்டுப்பாடுகள் காரணமாக நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு மூட்டைகளை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனே கொள்முதல் செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் விவசாயிகளை வருவாய்த் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil