/* */

ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம்: திருப்பதிக்கு புறப்பாடு

ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது

HIGHLIGHTS

ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம்: திருப்பதிக்கு புறப்பாடு
X

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது. வரும் 11ம் தேதி கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருமலை திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 5ம் திருநாள் கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 11 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. கருடசேவை மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் திருப்பதி பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீ ஆண்டாளுக்குச் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக 10 ஆம் தேதி அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.

இதனை முன்னிட்டு, இன்று காலையில் இருந்தே ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்றது, பிற்பகலில் நிறைவுபெற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு மாலை, கிளி சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகள் திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் கிச்சப்பன் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி இந்நிகழ்வு நடைபெற்றது.

Updated On: 9 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  4. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  10. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...