ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலரிடம் ரூ.6.50 லட்சம் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலாளர் பணம் வினியோகம் செய்யும்போது பிடிபட்டார். அவரிடமிருந்து 6.58 லட்சம் லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் 9வது வார்டு பகுதியில் அதிமுக மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் அவரது தந்தையிடம் இருந்து 3.30லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் 4 பேரை விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் விதமாக பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பகல் மற்றும் இரவு நேரம் சோதனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு சோதனை செய்யும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் 9வது வார்டு ரைட்டம்பட்டி பகுதியில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன் பணம் வழங்கிக் கொண்டிருந்த சில ஆண்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து அங்கு இருந்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கவிதாவிடம் விசாரணை செய்தபோது அவரிடம் இருந்து ரூபாய் 3.28லட்சம், பூத் ஸ்லிப் நோட்டீஸ் மற்றும் இரட்டை இலை பதிக்கப்பட்ட அட்டைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரை வீட்டில் வைத்து விசாரிக்கும் போது அவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் கதவை கவிதா திறக்க மறுத்து விட்டார். அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அந்த ரூமிற்கு சாவி இல்லை என்று மழுப்பலாக பதில் சொல்லிவிட்டார். நீண்ட வாக்குவாதத்திற்குப்பிறகு அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் அறையை சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 3.30லட்ம் பணத்தை பறிமுதல் செய்தனர். கவிதாவின் தந்தை பரமசிவம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் மொத்தமாக 6.58 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu