ரூ.6 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தல்: வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போதைப் பொருட்கள் கடத்தியதாக பேராலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டது. வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜனவரி 30, மதுரை சரக டிஐஜி பொன்னி தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான தனி படைக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் அருகே உள்ள காதி போர்டு காலனி அருகே ஸ்ரீவில்லி மதுரை மெயின் ரோடு கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நள்ளிரவில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது ஓசூரில் இருந்து ஒரு அசோக் லேலண்ட் லாரி ஸ்ரீவில்லி நோக்கி வந்துகொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி விசாரிக்கும் பொழுது அந்த லாரியை சேலம் பழைய சூரமங்கலம் மணிகண்டன் வயது 31 என்ற டிரைவர் ஓட்டி வந்தார். மேலும் அந்த லாரியில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பெல்லதே பச்ச கொடியா என்பவரது மகன் பிரகாஷ் வயது 35, மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கே. புதுப்பட்டி சுப்புராஜ் வயது 27, வத்திராயிருப்பு கோவிந்த நல்லூர் சக்தி முருகன் வயது 29 ஆகியோர் லாரியில் இருந்தனர்.
மேலும் போலீசார் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அங்கு மூடை மூடையாக கணேஷ் புகையிலை, புல்லட் ராணி எனும் பாக்கு ஆகிய மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். உடனடியாக தனிப்படை போலீசார் லாரியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை கைப்பற்றி 4 பேரையும் கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்கள், லாரி உள்ளிட்டவைகளை கைப்பற்றி வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவு நேரம் லட்சக்கணக்கான மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu