நோய் தாக்கத்தால் மா விளைச்சல் கடும் பாதிப்பு

நோய் தாக்கத்தால் மா விளைச்சல் கடும் பாதிப்பு
X

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்று வட்டார பகுதியில் தேன் நோய் தாக்கத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கான்சாபுரம்,அத்திகோவில், நெடுங்குளம், பட்டுப்பூச்சி,தாணிப்பாறை ஆகிய பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொதுமக்கள் நேரடியாக தோப்பிற்க்கே சென்று பழங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.

இந்தாண்டு இதற்கு மாறாக மாங்காய் சீசன் தலைகீழாக மாறிவிட்டது. தொடர் மழை மற்றும் மாமரங்களின் பூக்களில் தேன் நோய்த் தாக்கத்தால் மாமரங்களில் மா பிஞ்சு எடுப்பதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து மா விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்