ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு
X

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான 5 பேரூராட்சி வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு செய்தார்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான 5 பேரூராட்சி வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் டிஐஜி ஆய்வு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, எஸ். கொடிக்குளம், வத்திராயிருப்பு, மம்சாபுரம் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள பதட்டமான இடங்களை மதுரை சரக டிஐஜி பொன்னி ஆய்வு செய்தும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு குறித்தும் தேர்தல் அன்று எவ்வாறு பாதுகாப்பை மேற்கொள்ளலாம் என்று வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இந்த 5 பேரூராட்சிகளில் வாக்குச்சாவடிகள் எது பதற்றமானவை என கேட்டறிந்த அவர் அங்கு கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் வாக்குச்சாவடிகளில் தேர்தலின்போது எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக முன்கூட்டியே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!