சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை
X

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 24, 26, 27 ஆகிய 3 நாட்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு செல்ல நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.

மேலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரா பாவுர்ணமிக்கு இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!