/* */

சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

HIGHLIGHTS

சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள்  செல்ல  4 நாட்கள் அனுமதி
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு நாளை (14 )முதல் (17)வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி . இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு நாளை (14 )முதல் (17)வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 April 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்