/* */

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
X

சதுரகிரி செல்லும் மலைப்பாதை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சூலூர் அருகே 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. தமிழ்நாடு
    துன்பத்தில் ஒரு மகிழ்ச்சி : விழுப்புரத்தில் ஒரு சோக கதை..!
  3. லைஃப்ஸ்டைல்
    பரோட்டா பிரியரா நீங்க? - இந்த உண்மைகள் தெரிஞ்சா பரோட்டா பக்கமே போக...
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் EV சார்ஜிங் நிலையம் அறிமுக நிகழ்ச்சி || #ev...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  6. சினிமா
    தனியா உக்காந்து பாத்துடாதீங்க..! அப்றம் பயந்து போயிடுவீங்க..!
  7. வீடியோ
    எனக்கு இப்படி ஒரு படம் கெடச்சது சந்தோசம் Vani Bhojan ! |#anjaamai...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை
  9. வீடியோ
    Garudan Movie-ய Friends எல்லாம் சேந்து பாக்கலாம் !! #garudan #soori...
  10. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் லைவ் மேட்ச் எங்க பாக்கலாம்?