செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம்
X

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் செங்கல் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டு செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள கண்மாய்களில் அனுமதி வழங்க வேண்டும், சொந்த நிலத்தில் மண் அள்ளி செங்கல் உற்பத்தி செய்ய விண்ணப்பம் பெறும் நிபந்தனைகளை தளர்த்தி உடனே அனுமதி வழங்க வேண்டும்,புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பொதுமக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பறிபோவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் கையில் செங்கலுடன் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture