ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
X

பாலியல் புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட டென்சிங் பாலைய்யா.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா (45) இவர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை ( NCC) அமைப்பை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவியை சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!