/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த ஆட்சித் தலைவர். இணைப்புச் சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிப்பு.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ள பாதிப்பு மற்றும் கண்மாய்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் வெள்ள பாதிப்பு ஆய்வு செய்த ஆட்சித் தலைவர். இணைப்புச் சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ள பாதிப்பு மற்றும் கண்மாய்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மொட்டபத்தான் கண்மாய் கரை உடைந்து நகருக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நகரின் மையப்பகுதியான ஒட்டமடம், ஆராய்ச்சிபட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைத்தியநாத சுவாமி கோவிலில் மழை நீர் புகுந்ததால் உள் மற்றும் வெளிப்புற பிரகாரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மேகநாத ரெட்டி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த ஆட்சித்தலைவர் திருமுக்குளம் கரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரையும் இணைக்கும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் செல்வோர் நல்ல குற்றாலம் தெரு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 4 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்