ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மூன்று பேர் காயம்

ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மூன்று பேர் காயம்
X

சாலையில்  கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.

ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சோ்ந்தமரம் பகுதியிலிருந்து தேனிக்கு சரக்கு வாகனம் நுங்கு ஏற்றி வந்துகொண்டிருந்தது. இந்த வாகனம் ராஜபாளையம்- தென்காசி சாலையில் காவல் நிலையம் எதிரே சென்ற போது, எதிரே வந்த டிராக்டா் மீது மோதாமல் தவிா்ப்பதற்காக ஓட்டுநா் மணிகண்டன்(29) வாகனத்தை திருப்பினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தில் இருந்த மணிகண்டன், முருகன், மனோஜ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் மூன்று பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.இந்த விபத்து நடந்தபோது, நாமக்கல் மாவட்டத்திலிருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் புனலூா் நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநா், விபத்துக்குள்ளான வாகனத்தை பாா்த்துக்கொண்டே சென்றதால் லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மின் வயா்கள் அறுந்து கீழே விழுந்தன. மீட்பு பணியில் இருந்த போலீஸாா் மின் வயா் அறுந்து விழுவதைப் பாா்த்து ஓடியதால் உயிா் தப்பினா்.இந்த விபத்துகள் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags

Next Story
ai marketing future