கார்ட்டூன் பொம்மைகளுடன் வாக்கு சேகரிப்பு

கார்ட்டூன் பொம்மைகளுடன் வாக்கு சேகரிப்பு
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது மகள் கார்ட்டூன் பொம்மைகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வேட்பாளரின் மகள் திவ்யா கிருஷ்ணன்கோவில், நாச்சியார்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் உடல்நிலை சரியில்லாமல் 5 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவரது மகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!