ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பி.ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ( 40). கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊரானபி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 2.30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை உடைத்து வீட்டிற்குள் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டிருந்த போது சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்த திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் அளித்த தகவலையடுத்து வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுபோது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. விருதுநகரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வீட்டிலிருந்து அந்தப்பகுதி ஓடை வரை ஓடிச் சென்று நின்றது.

வீட்டில் ஆள் இருக்கும் போதே வீட்டுக்குள் புகுந்து திருடிச்சென்ற சம்பவம் பி.ராமச்சந்திராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உத்தரவின்பேரில் நகையை திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story