ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவர் செய்தது தவறில்லை என்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களிடம் பேசும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து உள்ளது. பணபலம், அதிகார பலம் ஆள் பலம் அவற்றின் மூலமாக தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து கரையேற்ற கூடிய வேலையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வேட்பாளர் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பார்வை சற்று மாற வேண்டும். ஆளுங்கட்சி அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை. சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம் இதில் என்ன தவறு இருக்கிறது? எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?. நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா?. விமான நிலையத்தில் முகத்திரை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள் அது சரியா தவறா ? முகவர் தன்னுடைய கடமையை செய்து இருக்கிறார் என்று கூறினார்.
எங்களைப் பொறுத்தவரை பல இடங்களில் நடைபெற்ற உள்ள தவறுகள் திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள். பிரச்சனைகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படாமலே உள்ளது. சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை - ஆளுங்கட்சியின் அழுத்தம் தான் இதன் காரணம் என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் மீறி பிஜேபி மிகச்சிறந்த வெற்றியைப் பெறும் என மேலும் கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu