/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி (தீ மிதி)திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வழக்கமாக பங்குனி அமாவாசை தினத்தன்று அதாவது 12 ஆம் திருநாள் நடைபெறும் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக நேற்று இரவே கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டு அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் 4 ரத வீதிகள் வழியாக சென்று வந்து கோவிலின் அருகே பூக்குழி இறங்கி வருகின்றனர்.

முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி மாரிராஜ் முதலில் பூக்குழி இறங்கி துவக்கி வைத்தார், தொடர்ந்து 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 400க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை கொரோனோ பாதிப்பு காரணமாக இந்த கோவில் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது