தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்
X

தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசைக்கு செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசைக்கு செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்.

தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசைக்கு செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசைக்கு 4 நாட்கள் பிரதோஷத்திற்கு 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாகவும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 2 ஆம் தேதி நாளை வரை ஆகிய 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில இன்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags

Next Story