சதுரகிரி சுந்தரமகாலிங்கம் காேவிலுக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு தடை
தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 04.09.2021 முதல் 06.09.2021 வரை கோவில் தரிசனம் செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிக்காட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 04.09.2021 முதல் 06.09.2021 வரை பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு செப்டம்பர் 04.09.2021 முதல் 06.09.2021வரை மேற்படி கோவில் தரிசனம் செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
பக்தர்களின்றி வெறிச்சோடிய சதுரகிரி:
தமிழகம் முழுவதும் வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் கோவிலில் தரிசனத்திற்கு மக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு அமலில் உள்ள நிலையில் இன்று பிரதோஷம், 5ஆம் தேதி சிவராத்திரி, 6ஆம் தேதி அமாவாசை ஆகிய மூன்று நாட்களும் சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் இன்று பிரதோஷத்திற்கு சதுரகிரி கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu