ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளைநோயால் அவதியுற்ற போது. இக்கோவிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார்.
இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று "ஆருத்ரா தரிசனம்" சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டு இன்று திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் நடராஜரை மாணிக்கவாசகர் எதிர்கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu