பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர்கள் தயார்
பிளவக்கல் அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தண்ணீர் திறந்துவைத்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாய் பேசுவதற்கு மட்டும்தான்; செயல்பாடுகளில் இல்லை. சென்னையில் வேலையை முடித்தது எல்லாம் நாங்கள்தான் எனவும், மழையால் ஏற்படும் பேரிடரை எதிர்கொள்ள 65,000 என்ன பணியாளர்கள் தயார் உள்ளனர் என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத்திற்காக அணையை திறந்து வைத்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவுகள் பெரியார் அணை இன்று திறக்கப்பட்டது முழு கொள்ளளவான 47 அடியில் 45 அடி நிரம்பி உள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில்,வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இன்று முதல் வரும் 28 ந்தேதி வரை நாள்தோறும் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் மழையின் அளவை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்க பரிசீலனை செய்யப்படும் என்றார். தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும்,பெரியாறு பிரதானக்கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும்.
தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அவரவர் பகுதிகளில் மழையினால் காற்றினால் ஏற்படப்போகும் இடையூறுகளை முன்னரே அறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில், கடந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இல்லாத வகையிலும் தண்ணீர் தேங்காமலும் முதலமைச்சர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்திற்கு பதில் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறந்த முறையில் செயலாற்றி இருந்தால் கடந்த வருடம் ஏன் சென்னையில் மழை நீர் தேங்கியது என்றும் கடந்த ஒரு வருடமாக திமுக ஆட்சியில் செய்த முன்னேற்பாடுகள் தான் தற்போது மழை நீர் உடனடியாக வழிவதற்கு காரணம் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சௌடால் பேச்சுக்கு தான் லாயக்கு என்று குற்றம் சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu