ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம் பல்கலை கழகத்தின் 34-வது ஆண்டு பட்டமளிப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் 34 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் 34 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கொரோனா காலங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை எந்த பல்கலைக்கழகங்களும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு வழங்காத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள தனியார் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 34 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய புள்ளியியல் நிறுவன இயக்குனர் முனைவர் சங்கமித்ரா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாய் பேசாத, காது கேட்காத பிடெக் மாணவர்கள் மற்றும் பிஎச்டி, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்ஏ, எம்எஸ் டபிள்யூ, பிபிஏ, பிஎஸ்சி, பிஎட், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயின்று முடித்த 1740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியும் முதலாவதாக இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதங்களையும் முனைவர் சங்கமித்ரா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலை இணைவேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu