ஸ்ரீவில்லிபுத்தூரில் 800 ஆண்டுகள் பழமையான குளத்தை சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில்  800 ஆண்டுகள் பழமையான குளத்தை சீரமைக்க  கோரிக்கை
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் 800 ஆண்டுகால பழமையான திருமுக்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி ஆய்வு செய்யும்போது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமுக்குளம் மிகவும் தொன்மையும் பழமையும் வாய்ந்த இந்த குளத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உண்டு..

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிதலமடைந்த 800 ஆண்டுகள் பழமையான குளத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமுக்குளம் மிகவும் தொன்மையும் பழமையும் வாய்ந்த இந்த குளத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உண்டு.

இந்தக் குளத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு நீராட்டு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சாமிக்கு அபிஷேகத்திற்கு இக்குளத்தின் நீரைத்தான் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது .

ஆனால் தற்போது இந்த குளத்தில் நீர் குறைவகவும் நீரில் அதிக அளவு மாசு படிந்துள்ள நிலையில் இதனை சீர்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக் கை வைத்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாள் கோவில் நிர்வாகமும், தனியார் அமைப்பும் இதனை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் மற்றும் அரசுத்துறை சார்பில் அனுமதி கிடைக்கவில்லை.

பல வருடங்களாக ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் முயற்சி செய்தும் இன்னும் அனுமதி கிடைக்காததால்பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த குளத்தை சீர்படுத்தி எப்போதும் மழை நீர் நிரம்புவது போல் இந்த குளத்தை சரி செய்ய வேண்டும். இடிந்து விழுந்துள்ள படிகட்டுகளை சரி செய்ய வேண்டும், குளம் முழுவதும் தூர் வாரி புதுபித்து தர வேண்டும்.

அவ்வாறு மழை காலங்களில் குளம் நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் முந்தைய அரசுக்கு கோரிக் கைகள் வைக்கப்பட்டது.

தற்போது அமைக்கப்பட்ட புதிய அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி அனைத்து துறை அரசு அதிகாரி களையும் அழைத்து திருமுக்குளத்திற்க்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ஒரு வாரகாலத்தில் குளத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story