அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு

அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு
X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த 12 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கால்நடை மருத்துவமனை.இந்த அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் ஜெய்கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து தனது அறையை திறந்த போது உள்ளே குளிர்சாதன பெட்டிக்கு அடியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. பின்னர் சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்த்தபோது, பெரிய அளவிலான பாம்பு ஒன்று படுத்திருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து உயிருடன் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!