தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தட்டிச்சென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் மாவட்டம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு பணிகள் குறித்த விஷயத்தில் துணை ராணுவத்தின் துணையோடு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வரும் ஞாயிறு அன்று காலை முதல் வாக்குப்பதிவு மெஷின்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டு இயந்திரங்கள் வைத்திருக்கும் இடங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!