கிராமத்தில் தங்கி விவசாயம் படிக்கும் மாணவிகள்

கிராமத்தில் தங்கி விவசாயம் படிக்கும் மாணவிகள்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 45 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயம் குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை படிக்கும் மாணவிகள் வேளாண்மை திட்டத்தின் கீழ் 45 நாட்கள் வத்திராயிருப்பு கிராமத்தில் தங்கி அங்குள்ள விவசாயிகளின் அன்றாட நடைமுறைகளையும் செயல்முறைகளையும் உடனிருந்து பட்டறிவு மூலம் கற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயலில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட நெல் இயந்திர நடவு செயல் விளக்கத்தில் கலந்துகொண்டு நெல் நாற்றுகளுக்கான விதை நேர்த்தி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் மூலம் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து நிலத்தில் இறங்கி உரம் தூவி விவசாயம் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story