கொரோனா தொற்று இல்லை – முகாமிற்கு செல்லும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை

ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் வருகிற 8 தேதி துவங்குகிறது. இந்த முகாமில் பல்வேறு கோயில் யானைகள் சில தனியார் யானைகள் உட்பட ஏராளமான யானைகள் பங்கேற்பது வழக்கம். தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்வது போல் முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்திற்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது அந்த உத்தரவின் அடிப்படையில் முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது .
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கும் கோவிட் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் தலைமையில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பரிசோதனையின் முடிவில் யானைக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது இதனைத்தொடர்ந்து 8 ஆம் தேதி நடைபெறும் தேக்கம்பட்டி முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை கிளம்பத் தயாராகி வருகிறது .
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu