சிவகாசி அருகே நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு: காவல்துறையினர் விசாரணை

சிவகாசி அருகே நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு: காவல்துறையினர் விசாரணை
X
சிவகாசியில் நீரோடையில் குளிக்கச் சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

சிவகாசியில் நீரோடையில் குளிக்கச் சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் 30 கட்டிட தொழிலாளியான இவர் சிவகாசி விருதுநகர் பிரதான சாலையில் உள்ள பாலத்தின் அருகே நீரோடையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். குளிக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவரை காணவில்லை என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 மணி நேர தேடலுக்கு பின்னர் வேல்முருகனை சடலமாக மீட்டனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!