சிவகாசியில் கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்-அரசுக்கு வழங்கிய ஆர்வலர்
சிவகாசியில் தன் பிள்ளைகளின் கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர் டேனியல்.
தமிழகம் முழுவதும் கொரோனோ இரண்டாம் அலை அதிகரித்து தற்பொழுது சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனோ பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் போதிய ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னால் இயன்ற உதவியாக சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் என்பவர் தனது பிள்ளைகளின் எதிர்கால கல்வி செலவிற்கு வைத்திருந்த பணத்தை வைத்து 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி உதவிக்கரம் நீட்டினார். உதவி ஆட்சியர் தினேஷ் குமார் மூலமாக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அய்யனாரிடம் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
பிள்ளைகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த பணத்தை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவைக்காக செலவு செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu