சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ  விபத்து
X

சிவகாசியில் இடிமழையால் தீ பிடித்த பட்டாசு ஆலையை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் தீ அணைப்பு வீரர்கள்.

இடி,மழையால் சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கீழு பெத்துல் பட்டியில் சண்முக நாதன் என்பவருக்கு சொந்தமான கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால், ஆலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இடி,மின்னல் காரணமாக பட்டாசு தயரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைத்துள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.


சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.விபத்தில் ஒரு அறை மற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!