இருசக்கர வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
X

சிவகாசி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பொண்ணுபாண்டி, குமார்.

சிவகாசி அருகே இருசக்கர வாகனம், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு.

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதல். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு. அரசு பேருந்து ஓட்டுனர் கைது. போலீசார் நடவடிக்கை.

சிவகாசியிலிருந்து வெம்ப கோட்டை செல்லும் சாலை சசி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சிவகாசியிலிருந்து ஏழாயிரம்பண்ணை சென்ற நகரப்பேருந்துடன் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொண்ணுபாண்டி வயது 29 அவரது நண்பர் குமார் வயது 29 ஆகியோருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே பொண்ணுபாண்டி உயிரிழந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த பொண்ணுபாண்டி கட்டிட தொழிலாளியாகவும், குமார் அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் அரசுப் பேருந்து ஓட்டுநர் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் வயது 50 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story