சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது

சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
X

பைல் படம்

சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி பகுதியில் ரவுடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனை செய்து வந்தனர்.

ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தும் வந்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் காமராஜர்புரம் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த போஸ் காலனியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் போண்டா என்கிற ராஜ்குமார் (வயது 39), சப்பட்டை என்கிற மாரிச்செல்வம் (36) ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அ

ப்போது இருவரும் வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai automation in agriculture