சிவகாசி அருகே குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பாேலீசார் விசாரணை

சிவகாசி அருகே குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பாேலீசார் விசாரணை
X

சிவகாசி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவன் அஸ்லாம்.

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது . 16 அடி கொண்ட ஆனைகுட்டம் அணை நிறைந்ததையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் சிவகாசி ஓடைதெரு பகுதியைச் சேர்ந்த அச்சக தொழிலாளி மகன் அஸ்லாம் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அணையில் குளிக்கச் சென்ற சிறிது நேரத்தில் மாணவனை காணவில்லை என சக நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்து பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 3 மணி நேர தேடுதல் பணிக்கு பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். திருத்தங்கல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture