ஆடி மாத கடைசி நாள்: சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத கடைசி நாள்: சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
X

சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி தினத்தையொட்டி அம்மனுக்கு 21 வகையான பொருட்களால் நடந்த சிறப்பு அபிஷேகம். 

ஆடிமாத கடைசி நாளில் சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி தினத்தையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனையடுத்து கோவில் முன்பு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அம்மனை வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!