பட்டாசு ஆலைகளில் ஆய்வு எதிரொலி; பட்டாசு ஆலைகள் மூடல்

பட்டாசு ஆலைகளில் ஆய்வு எதிரொலி; பட்டாசு ஆலைகள் மூடல்
X
சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு எதிரொலி-பட்டாசு ஆலைகள் மூடல்


சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் 30பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்களை தடுக்க மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் கொண்ட குழு சமீப நாட்களாக பட்டாசு ஆலைகளில் ஆய்வு பணியினை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை விதிமுறையை மீறியதாக 80க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னதாக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருளை பயன்படுத்தவும், சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவும் அனுமதி இல்லை எனவும் மீறி தயாரித்தால் ஆலைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனைத்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு ஆலைகள் சீல் வைக்கப்படும் என்ற அச்சத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 90 சதவீத பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலைகளை தாமாக முன்வந்து மூடியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்