சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கரத்தீ: உயிர்தப்பிய தொழிலாளர்கள்

சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

சிவகாசி பைபாஸ் சாலையில், பிரபல ஹிந்து தீப்பெட்டி ஆலை உள்ளது. வழக்கம்போல் இங்கு தானியங்கி இயந்திரம் மூலம், தீக்குச்சியில் ரசாயன மருந்து செலுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்து தகவல் அறிந்ததும், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில், சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தீக்குச்சி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!