சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது

சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது
X

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராமர்.

சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா கைது.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் 14 வயது மகள் 9ம் வகுப்பு முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் சிறுமியின் தாய் வழியில் உள்ள சித்தப்பா ராமர் (வயது 29) குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் சித்தப்பா சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராமர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai marketing future