சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக வருவாய்த்துறை, காவல் துறை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள ஆலாவூரணி பகுதியில் ராஜேஷ் என்பவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்வதாக தனி படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து வருவாய் துறையினர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ராஜேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story