சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசி பறிமுதல்

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசி பறிமுதல்
X

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி மாநகராட்சியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டதாக 900 அரிசி பைகள் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில் 268 பேர் போட்டியிடுகின்றனர். திமுக அதிமுக நேரடியாக தேர்தல் களம் காணுகிறது.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் நான்கு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். நள்ளிரவில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டபோது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருத்தங்கல் பகுதிக்கு உரிய ஆவணம் என்று கொண்டு வரப்பட்டதாக 5 கிலோ எடையுள்ள 900 அரிசி பைகளை (4 டன்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரிசி பைகள் ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் திருப்பதி ராஜாவிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!