அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள்:  எடப்பாடி பழனிசாமி பேச்சு
X

சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக பிரச்சார கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

கட்சியை உடைக்கும் எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள் போடப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.

இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசியில் பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் எடப்பாடி. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற வேண்டும்.

உண்மையைச் சொல்லி அதிமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தாலே வெற்றி பெற்று விடுவோம். அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.

பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இன்றைய நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுக வாக்களிக்க வேண்டும். யாரைக் கண்டும் ஓடி ஒளியப்போவது கிடையாது பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன் என அவர் பேசினார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 8 மாத காலம் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் முடிவுற்ற . திட்டங்களை தொடங்குகிறார். கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துள்ளார். இந்த அரசுகொள்ளை அடிப்பதிலே பிரதானமாக கொண்டுள்ளனர்.

பொங்கலை சிறப்பாக கொண்டாட 2500 கொடுத்து அரசு பொங்கல் தொகுப்பினை தரமானதாக வழங்கியது அம்மா அரசு. 5000 கொடுக்க சொன்ன ஸ்டாலின். தற்போது எதுவும் வழங்கவில்லை. மக்களின் வயிற்றில் அடித்த கட்சி திமுக. சர்வாதிகார அரசாங்கம் திமுக அரசு. நியாயத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

கட்சியை உடைக்க அதிமுக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்கு போடுகிறார்கள். ராஜேந்திரா பாலாஜி மீது வேண்டுமென்று வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வேடிக்கையாக உள்ளது. எதற்க்கும் அஞ்ச போவதில்லை. ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளை விட தன் குடும்பத்தை மட்டுமே பார்க்கிறார்.

மாநகராட்சி அறிவித்தது , திறந்து வைத்தது அம்மா அரசு. சிவகாசி மாநகராட்சி அடிப்படை தேவைகளை நிறைவேற்ற 100 கோடி ஒதுக்கியது அம்மா அரசு. பள்ளிகளை தரம் உயர்த்தியது .பேருந்து நிலையம் அமைத்து கொடுத்தது; கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அம்மா அரசு.

8 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருதி ஜிஎஸ்டி குறைத்தது. பட்டாசு தொழிலாளர்களுக்கு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கியது. பட்டாசு பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுத்தது அம்மா அரசு.

ஆட்சி வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனர். சொல்வது ஒன்று செய்வது ஒன்று தான் இந்த அரசு. லஞ்சம் இல்லாத துறையே இங்கு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!