சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்.

சிவகாசி ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ். இவர் பணி நிமிர்த்தமாக மார்க்கெட் சாலையில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக 500 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாததால் 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
சுகாதார ஆய்வாளர் எனவும், சுகாதார பணி மேற்கொள்வதற்காக வந்ததாக தெரிவித்தும் காவல்துறையினர் அபராதம் விதித்தாக சுகாதார ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார் .
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் இது போன்ற மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியிலும், சக முன் களப்பணியாளர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் விதித்த சிவகாசி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால முரளி கிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu