/* */

பங்குனி சித்திரை திருவிழா ரத்து -பக்தர்கள் சோகம்

பங்குனி சித்திரை திருவிழா ரத்து -பக்தர்கள் சோகம்
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற பங்குனி சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவும், பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவும் கொரோனோ பரவல் காரணமாக அரசின் நிலையான வழிகாட்டுதலின் படி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு திருவிழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து முடி காணிக்கை செலுத்துவது, கயிறு குத்துதல், முளைப்பாரி எடுத்தல், பறவை காவடி எடுப்பது, அக்கினி சட்டி எடுப்பது என பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிலையில் கோவில் திருவிழாவில் இரண்டாவது ஆண்டாக திருவிழா ரத்தாகியுள்ளது பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முக்கிய பூஜைகள் அனைத்தும் உள் வளாகத்தில் பக்தர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On: 10 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...